
Virat Kohli, Rohit Sharma Placed 2nd And 3rd In ICC ODI Rankings (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் இப்பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா ஐந்தாவ்து இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணி வீரர் டிரெண்ட் போல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். இப்பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார்.