விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார் - ஸ்ரீதர்!
விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்தது அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு தான் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஆயிரம் நாட்களாக தனது ஃபார்மை இழந்து தவித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, அவ்வபோது அரை சதங்களை அடித்து வந்தாலும் சதம் அடிக்க முடியாமல் திணறினார். தனது 70ஆவது சதத்தை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடித்திருந்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆசிய கோப்பை தொடருக்கு ஒரு மாதம் முன்பு விராட் கோலிக்கு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர், தொடர்ந்து இருக்கமான மனநிலையில் இருந்து வந்ததாக வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டார். ஓய்விற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய அவர், ஆசிய தொப்பை தொடரின் 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்தார். இவரது சராசரி 92. ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150. அதே மனநிலையுடன்
Trending
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலும் விளையாடினார். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இது ‘விராட் கோலி 2.0’ என்று பலராலும் அழைக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி எவ்வாறு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார்? எது அவருக்கு உதவிகரமாக இருந்தது? என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆர் ஸ்ரீதர் பேட்டியுளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார். இதற்கு முன்னர் சரியான மனநிலையில் இல்லை. மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். பிச்சிஐ சிறிது காலம் விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்க முடிவெடுத்தது. அதற்கு ஒப்புக்கொண்டு, ஓய்வெடுப்பதாக விராட் முடிவு செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு நன்கு வேலை செய்கிறது. மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவழித்தது மீண்டும் நல்ல மனநிலைக்கு அவரை கொண்டு வந்திருக்கிறது. தற்போது சிறப்பான மனநிலையில் விளையாடி வருவதை நாம் காண்கிறோம்.
விராட் கோலி பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது எப்படி செயல்படுவார் என தெளிவாக தெரிந்து விடும். தற்போது அவர் என்ஜாய் செய்கிறார் .ஆகையால் தெளிவான மனநிலையில் இருக்கிறார். டி20 உலக கோப்பையில் இதே மனநிலையுடன் அவர் செயல்பட்டால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும்.” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now