
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர வீரர் 6 ப்வுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். ஒரு நாள் நீங்கள் ரன் எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்கள், இது நடக்கும், கடவுள் பெரியவர். இது எனக்கு கிடைத்த ஒரு கடைசி சந்தர்பம். அதனால் இப்போட்டியில் நிச்சயம் நன்றாக விளையாட வேண்டும் என்று என்னினேன். ஏனெனில் இப்போது இல்லை என்றால் எப்போதும் அதனை என்னால் செய்ய முடியது என தோன்றியது.