
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் சென்னை வந்தடைந்ததுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்வார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன் என்பதை நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து அதை நிரூபித்துள்ளார்.