1-mdl.jpg)
Virat Kohli won't be there in my T20I side, says Ajay Jadeja (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என இந்திய அணி கைப்பற்றி விட்டது.
ஆனால் விராட் கோலி இந்த போட்டியில் சொதப்பியது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. களத்திற்கு வந்து 3 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ரிச்சர்ட் பந்துவீச்சில் டேவிட் மலனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி.
இந்நிலையில் கோலியின் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, தேர்வு குழுவில் நானிருந்தால் விராட் கோலியை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்ய மாட்டேன் என்று கடுமையாக சாடியுள்ளார்.