
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி ஆயிரம் நாட்களை கடந்துவிட்டது. இதனால் அவர் மீதான அழுத்தமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் அவரது ஃபார்ம் க்குறித்து கேவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டவர்கள் இங்கு ஜாம்பவான்கள் என்ற பெயருடைய நிறைய முன்னாள் வீரர்கள் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
மேலும் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை விராட் கோலிக்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் விரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுத்துள்ளார்.