விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த தொடரை இந்திய அணி வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இந்திய அணியில் இசான் கிஷான் போல் பயமின்றி அதிரடியாக விளையாடும் வீரர் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இஷான் கிஷன் தற்போது அச்சமின்றி விளையாடுகிறார். இசான் கிஷன் இரட்டை சதம் விளாசுவது போல் தொடர்ந்து தொடக்க இடத்தில் அதிரடியாக ஆட வேண்டும். இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள்.
Trending
இதேபோன்று இந்திய அணியின் பிளேயிங் லெவனின் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளரும், பந்து வீச்சு தெரிந்த பேட்ஸ்மேன் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணியில் இருக்க வேண்டும். விராட் கோலிக்கு உலகக் கோப்பை வெல்ல தனி பொறுப்பு வழங்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் கௌதம் கம்பீர் தான் இந்திய அணியின் ஆங்கர் ரோலில் செயல்பட்டர். அதேபோன்ற ஒரு பணியை விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் செய்ய வேண்டும்.
விராட் கோலி இன்னிங்ஸ் முழுவதும் பொறுமையாக நின்று விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால் மறுபுறத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வாய்ப்பு ஏற்படும். ஒவ்வொரு வீரர்களுக்கும் தனியாக இது போன்ற பொறுப்புகளை வழங்கினால் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும்” என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now