
தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் விராட் கோலியின் ஹோட்டலில் அவரது அறையில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதில் விராட் கோலி தன்னுடைய அறையை எப்படி சுத்தமாக வைத்து இருந்தார். மேலும் தனக்கு பிடித்த கடவுளின் சிலைகளையும் கோலி வைத்திருந்தார். இந்த காணொளி கிங் கோலியின் ஹோட்டல் ரூம் என்று இணையதளத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த புகைப்படம் விராட் கோலி கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி தன்னுடைய அனுமதி இல்லாமல் அறையில் புகைப்படம் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அதை நான் எப்போதும் வரவேற்பேன். ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும்.