
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பித்து அதற்கு அடுத்து நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கும் உலகக் கோப்பைத் தொடர் அங்கேயே முடிவுக்கும் வருகிறது. நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, பாபர் ஆசம், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் இவர்களின் பேட்டிங் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே சமயத்தில் துவக்க இடத்தில் வந்து பெரிய அளவில் இம்பேக்ட் கொடுக்கக்கூடிய ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் போன்ற அனுபவ துவக்க ஆட்டக்காரர்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் உலகக் கோப்பை தொடர் என்றாலே யாரும் எதிர்பார்க்காத வீரர்கள் திடீரென்று ஆதிக்கம் செலுத்தும் பல நிகழ்வுகள் நடக்கும். உலகக் கோப்பை தொடரின் போது கிடைக்கும் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு திடீரென்று சில வீரர்கள் எழுச்சி பெறுவார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வைத்து ஒரு கனவு அணியை அமைக்க கேட்டதற்கு, அவர் ஐந்து வீரர்களை அந்த அணிக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் தற்பொழுது ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் பந்துவீச்சில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிட்சல் ஸ்டார்க்கை அவர் தேர்வு செய்யவில்லை.