டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடையை டாப் 5 பேட்டர்கள் யார் என்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவால். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்கள் என 8586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதம், 38 அரைசதங்களுடன் 8273 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 394 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சில் 136 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது டாப் 5 பேட்டர்களை விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். அதில் அவர் தனது நம்பர் ஒன் வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைத் தேர்தெடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 297 போட்டிகளில் விளையாடி 50 சதம், 73 அரைசதங்களுடன் 13,963 ரன்களைக் குவித்துள்ளார்.
Trending
அதனைத்தொடர்ந்து அவர் இரண்டாவது வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்தார். சாச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை 463 போட்டிகளில் 49 சதங்கள், 96 அரைசதங்கள் என 18426 ரன்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தார். அதன்பின் மூன்றாம் இடத்தில்பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக இன்ஸமாம் உல் ஹக்கை வீரேந்திர சேவாக் தேர்வு செய்தார்.
அதன்பின் 4ஆவது வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸையும், ஐந்தாவது வீரராக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலையும் சேவாக் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் அவர் தன்னுடன் சம காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, ஜாக் காலிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Virender Sehwag named his top five ODI batters from those who played during his career.#ViratKohli #SachinTendulkar #abdevilliers #chrisgayle pic.twitter.com/slrYArGirx
— CRICKETNMORE (@cricketnmore) February 17, 2025Also Read: Funding To Save Test Cricket
சேவாக் தேர்வு செய்த சிறந்த 5 ஒருநாள் பேட்டர்கள்
- விராட் கோலி (இந்தியா).
- சச்சின் (இந்தியா).
- இன்ஸமாம் - உல் - ஹக் (பாகிஸ்தான்).
- ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா).
- கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்).
Win Big, Make Your Cricket Tales Now