Advertisement

இந்திய அணியில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் - விரேந்திர சேவாக்!

இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இளம் வீரரான பிரித்வி ஷாவிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Virender Sehwag on Prithvi Shaw’s absence from New Zealand Tour
Virender Sehwag on Prithvi Shaw’s absence from New Zealand Tour (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 14, 2022 • 10:56 PM

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணி, இந்த வருடத்திற்கான டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிரட்டல் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 14, 2022 • 10:56 PM

அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடுமையாக திணறியது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 168 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை விட மிக மோசமாக செயல்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் விளையாடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள், இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தனர்.

Trending

சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இன்று வரையில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது அதிருப்திகளை முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இளம் வீரரான பிரித்வி ஷாவிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் பேசுகையில், “2023ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ப்ரித்வி ஷாவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரித்வி ஷாவிற்கு சமீபத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைப்பது இல்லை. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் என அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் ப்ரித்வி ஷா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். 

உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ப்ரித்வி ஷாவிற்கு இந்திய அணியில் இடம் கொடுத்தால் இந்திய அணியில் நிலவி வரும் டாப் ஆர்டர் பிரச்சனை சரியாகும். குறிப்பாக டி20 போட்டிகளுக்கு பிரித்வி ஷா சரியான நபர், ரிசர்வ் வீரராகவாவது பிரித்வி ஷா இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement