ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்களுக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்துள்ள சேவாக், மூன்றாம் இடத்தில் விராட் கோலியையும், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவையும் தேர்வுசெய்துள்ளார்.
Virender Sehwag Didn't Pick Hardik Pandya In His XI For The T20 World Cup! #T20WorldCup #India #TeamIndia #Cricket pic.twitter.com/RbXiEjTskm
— CRICKETNMORE (@cricketnmore) April 24, 2024
அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ள அவர், ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவை மட்டுமே தேர்வு செய்துள்ளார். மேலும் அணியின் ஃபினிஷராக ரிங்கு சிங் அல்லது ஷிவம் தூபே இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து பந்துவீச்சில் குல்தீப் யாதவுடன், ஜஸ்ப்ரித் பும்ரா, சந்தீப் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தனது பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளார்.
சேவாக் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரவீந்திர் ஜடேஜா, ரிங்கு சிங்/ஷிவம் தூபே, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் புமா, சந்தீப் சர்மா, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now