
இந்திய அணி நேற்று ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்று, ஆசியக் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இறுதிப் போட்டியில் மழையின் ஆபத்து மிக அதிகமாகவே இருந்தது. அது ரிசர்வ் டே ஆன இன்றும் தொடர்கிறது. இப்படியான நிலைமையில் முகமது சிராஜ் தனது அற்புதமான பந்துவீச்சால் இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டினார்.
இதன் காரணமாக இந்திய அணி வெகு எளிதாக 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி, எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. நேற்றைய போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் நேற்றைய போட்டியில் முகமது சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். அவர் தனது இரண்டாவது ஓவரை வீசும் பொழுது நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி விட்டார்.
மேலும் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு ஓவர் கூடுதலாக வீசினார். அதற்குப் பிறகு அவருக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "நாங்கள் அனைவரும் அவரை பாராட்டுகிறோம். அந்த ஸ்பெல்லை அவர் வீசும் பொழுது நாங்கள் அனைவரும் பின்னால் இருந்தோம். அவர் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன்.