-mdl.jpg)
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக இந்திய அணி, லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்காக கடந்த 16ஆம் தேதியே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், இந்திய அணியுடன் இங்கிலாந்துக்கு செல்லவில்லை.