
தற்போது உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான இந்தத் தொடரில் தற்பொழுது 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன.
இதில் கடைசி போட்டி டிராவில் முடிய, மற்ற மூன்று போட்டிகளில் இரண்டை ஆஸ்திரேலியாவும் ஒன்றை இங்கிலாந்தும் வென்று இருக்கின்றன. இதன் காரணமாக கடைசியாக ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியாவிடமே ஆஷஸ் கோப்பை அளிக்கப்படும். கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெல்லாவிட்டாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக ஆஷஸ் தொடரை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தற்போதைய தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்கின்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். இது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.