வார்னரின் நிதானம் அழுத்தத்தை அதிகரிக்கிறது - கிறிஸ் கெயில்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் நிதான ஆட்டம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார்.
சொந்த அணிக்கு எதிராகவே டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் வார்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 துறையிலும் பலவீனமான வீரர்களைக் கொண்ட அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி மாறியுள்ளது. 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து -1.576 நெட் ரன்ரேட் கொண்டதாக பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை டெல்லி அணி பிடித்துள்ளது.
நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசிப் பந்தில் மும்பை அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அருமையான ரன் அவுட் வாய்ப்பை டேவிட் வார்னர் தவற விட்டார். பேட்டிங்கிலும் 47 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டிகளையே சில வீரர்கள் டி20 போல் ஆடும் நிலையில் வார்னரின் ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
Trending
இந்நிலையில் வார்னர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னால் வீரர் கிறிஸ் கெயில் கூறுகையில், “முதல் ஆறு ஓவர்களில், அவர் சற்று உள்நோக்கத்தை வெளிப்படுத்தினார் மற்றும் அங்கு நேர்மறையாக இருக்க முயன்றார். பவர்பிளேயில் பேட்டிங் செய்ய விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அவர் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கிறார்.
எனவே அவர் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர். முந்தைய ஆட்டத்தில் அவர் அதைப் பற்றி பேசினார். யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. கடந்த இரண்டு-மூன்று ஆட்டங்களில் கூட, அவர் அடிக்க முயன்றபோது, அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அந்த நேரத்தில் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. பிருத்வி ஷா பேட்டிங் செய்யும்போது, அவர் தனது அதிரடியை வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now