
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து மந்தனா ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர்.