
Washington Sundar replaces Deepak Chahar in India's ODI squad for series against South Africa (Image Source: Google)
இந்தியாவி சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
இதற்கிடையில் தீபக் சஹார் காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. பயிற்சியில் ஈடுபடும் போது தீபக் சஹார் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒரு நாள் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.