
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு! (Image Source: Google)
இந்திய அணி நேற்று வங்கதேச அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
இந்த காரணத்தால் நேற்றைய தோல்வி இந்திய அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இருக்கின்ற வீரர்களை வைத்து விளையாடிய காரணத்தினால், அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறை குறித்த கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் நீளம் ஒன்பதாவது இடம் வரை இருந்தது. அவ்வளவு நீளமாக இருந்தும் 265 ரன்களை வெற்றிகரமாக இந்தியாவால் துரத்த முடியவில்லை என்பது கவலையான விஷயமே.