Advertisement

கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம் - இந்திய வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அட்வைஸ்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement
Wasim Akram provides advice for India’s pace attack!
Wasim Akram provides advice for India’s pace attack! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 06, 2023 • 12:55 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இதற்காக தற்போது இருஅணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 06, 2023 • 12:55 PM

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த முக்கியமான இறுதிப்போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார்.

Trending

இது குறித்து பேசிய அவர், “இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. முதல் 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும். அந்த குறிப்பிட்ட ஓவர்களில் கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டாம். அதேபோன்று பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அமைதியாக இருங்கள்.

ஏனெனில் அதைத்தான் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் கூடுதல் பவுன்சை தான் விரும்புவார்கள். இந்த மைதானத்தின் தன்மை எப்போதுமே ஆசிய நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் அந்த சூழல் ஏற்படும். ஆனால் நாம் ஜூன் மாதத்திலேயே இங்கு வந்துள்ளதால் மைதானத்தின் தட்பவெட்பமும் சரி, சூழலும் சரி வித்தியாசமாக இருக்கும். எனவே பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடையாமல் விக்கெட்டை எடுக்கும் கட்டுக்கோப்புடன் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கவனக் குறைவு ஏற்படாமல் வெற்றி முனைப்புடன் பந்துவீச வேண்டும்” என கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement