
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக நழுவவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ரஹானே சிறப்பாக விளையாடி கொடுத்தார். அப்போது இவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் இருந்தார்.
அத்னபின் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனது மற்றொரு பக்கத்தை காட்டினார். ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் பிசிசிஐ இவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு எடுத்தது. எடுத்ததற்கு பிரதிபலனாக முதல் இன்னிசில் 89 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் என இக்கட்டான சூழல்களில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார்.
பேட்டிங்கில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.