
ENG vs IND 1st Test: இந்திய அணியின் லெவனை தேர்ந்தெடுத்துள்ள வாசிம் ஜாஃபர் தனது அணியில், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ஆகாஷ்தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக முன்னாள் வீர்ர் வாசிம் ஜாஃபர் தனது லெவனை தேர்வு செய்துள்ளார்.
அந்தவகையில் வாசிம் ஜாஃபர் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இந்திய அணியின் லெவனை கணித்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்ததை அடுத்து அவர்களது இடத்தை நிரப்பும் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்ஷன் ஆகியோரில் யாரேனும் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறார்.