
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கும் இந்திய அணி இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளை தற்போதே செய்ய துவங்கியுள்ளது.
இதனால் இந்த தொடர் குறித்தான முக்கியமான விஷயங்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் எந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.