
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லெய்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் 39 ரன்களையும், சமித் படேல் 24 ரன்களிலும், கேப்டன் மோர்கன் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வெய்ன் பார்னெல், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடைய தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏபிடி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காம. 15 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 116 ரன்களையும், ஹாசிம் அம்லா 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.