
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் அபினவ் மனோகர் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார்.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் இரண்டாவது ஓவரை வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஃப் சைடில் ஒரு கட் ஷாட்டை விளையாட முயன்று பந்தை தூக்கி அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அபினவ் மனோகர் அபாரமான தாவியதுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார்.
இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பாட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் அபினேஷ் மனோகர் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசியனால் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.