
Yashasvi Jaiswal Broken Bat Video: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தர். இதில் இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின் 58 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாய் சுதர்ஷன் 26 ரன்களுடனும், ரிஷப் பந்த் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், டௌசன் மற்றும் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.