முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்ஷன் விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் - காணொளி
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.

Manchester Test: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் ஷுப்மன் கில் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தனது முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன்படி இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில் அதனை இந்திய அணி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்கொண்டார். அப்போது ஓவரைன் முதல் மூன்று பந்துகளில் எந்த ரன்களையும் எடுக்காத ஜெய்ஸ்வால், நான்காவது பந்தை தடுத்து விளையாட முயற்சித்தார்.
ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த வேகத்தை விட மெதுவாக வந்த காரணத்தால் அது நேரடியாக பேட்டில் எட்ஜாகி ஸ்லிப்பில் நின்றிருந்த ஜோ ரூட் கைகளில் தஞ்சமடைந்தது. அதன்பின் முதல் பந்தை எதிர்கொண்ட சாய் சுதர்ஷனும் பந்தை தவறவிட முயற்சித்த நிலையில் பேட்டில் எட்ஜாகி ஹாரி ப்ரூக் கைகளில் தாஞ்சமடைந்தது. இதனால் இரு வீரர்களும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TWO IN TWO!
— England Cricket (@englandcricket) July 26, 2025
Nicked straight to Harry Brook. WHAT A START!
pic.twitter.com/qbokPo7iKj
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Also Read: LIVE Cricket Score
இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now