
Zimbabwe T20I Tri-Series: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஜிம்பாப்வேவில் நடைபெறும் முத்தாரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது சிக்கந்தர் ரஸாவின் அரைசதத்தைன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 54 ரன்களையும், பிரையன் பென்னட் 30 ரன்களையும் சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ருபின் ஹர்மான் 45 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 41 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.