
Sanju Samson - ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், பயிற்சியை முடித்து மைதானத்தில் இருந்து வெளியே வந்த போது ரசிகர்கள் அவரை காண காத்திருந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதனையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் சென்றடைந்தது. துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் வீரர்களின் பயிற்சி அமர்வு நடந்து வருகிறது. இதற்கிடையில், பயிற்சி அமர்வுக்குப் பிறகு, பயிற்சியை முடித்துவிட்டு சஞ்சு சாம்சன் வெளியே வருவதைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தபோது ஒரு வேடிக்கையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.