
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் களமிறங்கினர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் 46 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஒல்லி போப் 77 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலிய்னுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்திப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.