ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 43 ரன்களையும், ஜோஸ் பட்லர் 30 ரன்களையும், ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை அழுத்தத்தில் தள்ளினார். அதிலும் குறிப்பாக அணிக்கு தேவைப்படும் நேரங்களில் ஷுப்மன் கில் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்டோரை க்ளின் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
Jasprit Bumrah and Trent Boult with an exhibition of hostility @mipaltan are right back in the contest
Updates https://t.co/DdKG6Zn78k #TATAIPL | #MIvGT | @Jaspritbumrah93 pic.twitter.com/gvL3X5d8bf— IndianPremierLeague (@IPL) May 6, 2025Also Read: LIVE Cricket Score
அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசிய நிலையில், ஓவரைன் 5ஆவது பந்தை ஷுப்மன் கில் எதிர்கொண்டர். அப்போது பும்ரா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறிய ஷுப்மன் கில் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன், 43 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now