முதல் ஓவரிலேயே ஆர்யா, ஸ்ரேயாஸை க்ளீன் போல்டாக்கிய ஆர்ச்சர் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் 10 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 17 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்துள்ளனர். இதனால் அந்த் அணி 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
Archer on
Jofra Archer's double timber-strike gives #RR a dream start
Updates https://t.co/kjdEJydDWe#TATAIPL | #PBKSvRR | @JofraArcher | @rajasthanroyals pic.twitter.com/CfLjvlCC6L— IndianPremierLeague (@IPL) April 5, 2025பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் லெவன்: பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இம்பேக்ட் பிளேயர்கள் - பிரியான்ஷ் ஆர்யா, ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத் வைஷாக் விஜய்குமார்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், சந்தீப் சர்மா.
இம்பேக்ட் பிளேயர்கள் - குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now