
Jofra Archer vs Rishabh Pant: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்தின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்தின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகியுள்ளது.