
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தவாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி, முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தது அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடி வருகிறது.