
16ஆவது ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த சென்னையும் மும்பையும் மோதிக் கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு இந்த முறை தொடக்க வீரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் இசான் கிஷான் இருவரும் வந்தார்கள். கடந்த ஆட்டங்கள் போல் இல்லாமல் இந்த முறை சென்னை அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. கேமரூன் கிரீனை துஷார் தேஷ்பாண்டே 6 ரன்களிலும், இஷான் கிஷான் 7, ரோஹித் சர்மா 0 கண்களிலும் தீபக் சகர் இருவரும் வெளியேற்றி மும்பைக்கு அதிர்ச்சி துவக்கம் தந்தார்கள்.
இதற்கு அடுத்து சேர்ந்த சூர்யகுமார் மற்றும் இளம் வீரர் நெகில் வதேரா இருவரும் பொறுப்புடன் விளையாடி கொஞ்சம் அணிக்கு ஸ்கோர் கொண்டு வந்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா சூர்யகுமார் யாதவை 26 ரன்னுக்கு வெளியேற்றினார். அடுத்து வதேரா உடன் ஸ்டப்ஸ் இணைந்து பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். இளம் வீரர் வதேரா நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக விளையாடி அணிக்கு அரை சதம் எடுத்தார்.