
ஐபில் கிரிக்கெட் தொடரில் நேற்று கால்பந்து போட்டிகளையே மிஞ்சும் அளவுக்கு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. லக்னோ அணிகு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி விக்கெட்டுகளை வீழ்த்தும்போது எல்லாம் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் போட்டியின் போது பிட்ச் நடுவே விராட் கோலி நடந்ததாக நவின் உல் ஹக் குற்றம் சாட்டியதே இந்த மோதலுக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
அப்போது விராட் கோலி ஷூ காலை தூக்கி ஏதோ கூறினார். இது அவமரியாதை செயலாக கருதப்படுகிறது. இதுதான் போட்டி முடிந்ததும் மெயர்ஸ், விராட் கோலியுடன் கோபமாக பேசிக் கொண்டு வந்தார். இதனை பார்த்த கம்பீர், மெயர்ஸை அழைத்துச் சென்றார். அப்போது விராட் கோலிக்கும் கம்பிருக்கும் வாக்குவாதம் ஏற்பட இரு அணி வீரர்களும் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்கு முன்பு இரு அணி வீரர்களும் பரஸ்பரமாக கை கொடுக்கும் போது கம்பீர் கோலியிடம் வேகமாக கையை கொடுத்து விட்டு கோபமாக சென்றார். அப்போது நவீன் உல் ஹக், விராட் கோலி கையை பிடித்து ஏதோ கூற விராட் கோலி அதற்கு பதிலடி கொடுத்தார். அப்போது நவீன் உல் ஹக் மீண்டும் கோலியை சண்டைக்கு அழைக்க, அங்கு நின்ற மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை தடுத்தார்.