மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி காலிறுதி சுற்றில் நேபாள் அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இடது கை இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார்.
இளம் வயதில் பல நாடுகள் விளையாடும் தொடரில் சதம் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். பேட்டிங் வரிசையில் இவருக்கு அடுத்து வந்த ருதுராஜ், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா என யாரும் சரியாக விளையாடவில்லை. சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்கள்தான் இறுதி நேரத்தில் எடுத்தார். இந்த நிலையில் கடைசி ஓவரை முழுமையாக எடுத்த ரிங்கு சிங் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும், மூன்றாவது பந்தை பவுண்டரிக்கும் அனுப்பினார். இதற்கு அடுத்து நான்காவது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.
Trending
Rinku Singh's day out in Blue #INDvNEP #IndiaAtAG22 @rinkusingh235 pic.twitter.com/timMWWPtDg
— KolkataKnightRiders (@KKRiders) October 3, 2023
பேட்டிங் முனைக்கு வந்த சிவம் துபேவுக்கு வீசப்பட்ட பந்து வைடாக அமைய, மேலும் ரிங்கு சிங் அந்த நேரத்தில் ஓடி ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு சென்று விட்டார். கடைசி இரண்டு பந்துகளில் ரிங்கு சிங் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு ரன்கள் என எட்டு ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இந்த 25 ரன்கள் 23 ரன்களை ரிங்கு எடுத்தார். இறுதியாக இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று போட்டி நடைபெற்ற மைதானம் சிறியது என்பதாலும், இந்திய அணியின் மிடில் வரிசை சரியான ரன்களை அடிக்கவில்லை என்பதாலும், நேபாள் அணி இந்திய அணிக்கு பயம் கொடுத்தது உண்மை. கடைசி ஓவரில் ரிங்கு சிங் பதட்டப்படாமல், முதிர்ச்சியான ஃபினிஷரைப் போல் அந்த ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால், நேபாள் அணி வெற்றி பெற்று இருந்தால் ஆச்சரியம் கிடையாது. இதேபோல் ரிங்கு அயர்லாந்துக்கு எதிராக பினிஷர் ரோலில் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now