
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தவகையில் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதால் அவர்கள் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்து துபாயில் நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் துபாய் சென்றடைந்தனர். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களுடைய பயிற்சியைத் தொடங்கினர். மேலும் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.