
Romario Shepherd Video: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபர்ட் அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கு உதவினார்.
சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி நேற்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 52 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபர்ட் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்மீத் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்காஸ் அணியில் ஷியாம் ஜஹாங்கீர் 40 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.