SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமாக தொடங்கிய நிலையில் 13 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் - ரொஹன் குன்னுமொல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து குன்னுமொல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சல்மான் நிஸாரும் அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அப்துல் பசித் 23 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் கேரள அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கோவா அணியில் இஷான் கடேகர் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் விஜேடி முறைப்படி கேரள அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சல்மான் நிஸார் தேர்வு செய்யப்பட்டார்.
Kerala captain Sanju Samson was on song during his cameo of 31(15) against Goa #SMAT | @IDFCFIRSTBank
— BCCI Domestic (@BCCIdomestic) December 1, 2024
Scorecard https://t.co/xbokdfTIQo pic.twitter.com/UTOpeuEH87
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் தற்போது உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now