
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இன்று கடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். இதில் இன்னிங்ஸின் 4ஆவது பந்தை ஜான்சன் அபாரமான யார்க்கராக வீசிய நிலையில் அதனை சற்றும் எதிர்பார்க்காத குர்பாஸ் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன், க்ளீன் போல்டாகினார்.