
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதில் ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஹைத்ராபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட பல்வேறு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
அதிலும் குறிப்பாக திறப்பு விழாவிற்கு செல்ல விராட் கோலி அனுமதுகோரிய நிலையில் பிசிசிஐயும் அவருக்கு அனுமதியளித்தது. ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துகு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்தார். அத்துடன் அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும் செல்லவில்லை. இந்நிலையில், விராட் கோலியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர் நேற்றைய தினம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தென்பட்டார்.