ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டிம் செஃபெர்ட் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செஃபெர்ட் இமாலய சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. .
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில்அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களையும், ஷதாப் கான் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பென் சீயர்ஸ், ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Trending
இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களையும், ஃபின் ஆலான் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் மிட்செல் ஹெய் 21 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிம் செஃபெர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
119m six by Tim Seifert against "Eagle" Shaheen Afridi.#PAKvsNZ #NZvPAKpic.twitter.com/nuHNlvh7w3
— Field Vision (@FieldVisionIND) March 18, 2025Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் செஃபெர்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். குறிப்பாக இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷாகீன் அஃப்ரிடி வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட செஃபெர்ட் ரன்கள் ஏதும் எடுக்காமல் மெய்டனாக்கினார். ஆனால் அதற்கு பதிலாக இன்னிங்ஸின் மூன்ராவது ஓவரை அஃப்ரிடி வீச, அந்த ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிராட்டினார்.இந்நிலையில் டிம் செஃபெர்ட் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைர்லாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now