
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி தொடரின் 24ஆவது லீக் போட்டி ஃபுளோரிடாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸை பேட்டிங் செய்ய அழைத்த்து.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் 11 ரன்னிலும், மொனாங்க் படேல் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், கீரன் பொல்லார்ட் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களையும் சேர்க்க, எம் ஐ நியூயார்க் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.