
Wiaan Mulder And Babar Azam Fight Video: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ராம் ஷஷாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.