
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனா.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை காரணமான மோதல்கள் வெடித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நடைபெறை இருந்த காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
அதேசமயம் சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களும் விளையாடுவது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை இந்தியா சாம்பியன்ஸ் அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், யுசுப் பதான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.