Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!

ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2024 • 14:17 PM
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Advertisement

எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை வெல்லும் வாய்ப்பை இழந்த அணியானது தற்போது அடுத்ததாக இந்த டி20 உலக கோப்பையை குறிவைத்து தங்களது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது பலமான அணி கட்டமைக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோகவும் இருக்கிறது. ஏற்கனவே இந்திய டி20 அணியில் ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் என பல்வேறு கேப்டன்கள் நியமித்து சோதனையும் நிகழ்த்தப்பட்டது.

Trending


அதோடு டி20 கிரிக்கெட்க்கான தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், இசான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. இதில் ஒரு புறம் யாஷஸ்வி ஜெயஸ்வால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தனது இடத்தை உறுதி செய்துவிட்டார் என்று கூறவேண்டும். எனவே எதிர்வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் அவரே தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவும் விளையாடும் பட்சத்தில் ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியா விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே தற்போது இந்திய அணியில் நிரப்பப்படாமல் இருக்கிறது.

இவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பே இல்லை என்று கூறலாம். ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் டாப் ஆர்டரில் எந்த ஒரு வீரரையும் நீக்க முடியாது என்பதனால் ஷுப்மன் கில்லுக்கே அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்றே கூறலாம்.

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம். இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement