Advertisement

நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்! 

நானும் சூர்யகுமார் யாதவும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். அதன் காரணமாகவே எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.  

Bharathi Kannan
By Bharathi Kannan September 22, 2023 • 22:39 PM
நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்! 
நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்!  (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான ஒரு வெற்றியை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கில் இருவரும் 142 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு தந்தார்கள். இதற்கடுத்து இந்திய அணி திடீரென 185 ரன்கள் விக்கெட்டுகள் என்று சிறிதாக நெருக்கடிக்கு வந்தது. இந்த நேரத்தில் கேஎல் ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.  

Trending


இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கேஎல்ராகுல், “கேப்டன் பதவி என்பது, இது எனக்கு முதல் முறை நடப்பது கிடையாது. இதற்கு நான் பழகி விட்டேன். நான் அதை விரும்புகிறேன். கொழும்புவிற்கு பிறகு இங்கு ஆரம்பத்தில் சொர்க்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. இது கடினமானது. உடல் ரீதியாக சவால் ஆனது.

ஆனால் நாங்கள் அனைவரும் உடற் தகுதியில் வேலை செய்திருக்கிறோம். அது களத்தில் வெளிப்படுகிறது. நாங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாட திட்டமிட்டோம். எனவே அவர்கள் 10 ஓவர்கள் வீச வேண்டி இருந்தது. ஷுப்மன் கில் செட் பேட்டர் ஆட்டம் இழந்த பொழுது ஆட்டம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால் சூர்யாவுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தது. 

இது போன்ற சவாலான சூழ்நிலையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இருவரும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் பேட்டர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். நாங்கள் எதிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் எப்பொழுதும் ஒரு சமநிலையில் இருக்கவே விரும்புகிறோம். எனவே நாங்கள் ஆழமாக எடுத்துச் சென்றோம்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement