
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
இந்தநிலையில், விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்களைப் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இஷான் கிஷன் திறமையான கிரிக்கெட் வீரர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் அவர் விளையாடும் விதம் எப்படி இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் தான் அவர் இரட்டை சதம் அடித்தார். அவரது திறமையின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை இல்லை. இஷான் கிஷனிற்கான போதிய வாய்ப்புகள் வழங்க விரும்புகிறேன்.