
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 186/7 ரன்களை குவித்தது.
அந்த அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 117 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்தது. எனினும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் 54 ரன்களும், டேனியல் சாம்ஸ் 28 ரன்களும் குவித்து ஆஸ்திரேலிய அணியை 186 ரன்களுக்கு உயர்த்தி சென்றனர்.
கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கும், ரோகித் சர்மா 17 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி (63), சுர்யகுமார் யாதவ் 69 ரன்களும் விளாசி இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களை குவித்ததால் 19.5 ஓவர்களில் இந்தியா 187 ரன்களை எட்டி வெற்றி கண்டது. இதன் மூலம் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது.